மதுரை செல்லூர் பகுதியில் சிகரெட் வடிவில் மிட்டாய் தயாரித்த ஆலைக்கு சீல்,உணவு பாதுகாப்பு துறை அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் சிகரெட் வடிவில் மிட்டாய்கள் விற்பனையில் உள்ளது. இதற்கு குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது அதே வேளையில் சிகரெட் வடிவ மிட்டாய்களை ஸ்டைலாக ருசிக்கும் குழந்தைகளுக்கு புகைபிடிக்கும் எண்ணம் வரலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே சிகரெட் வடிவ மிட்டாய்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி ஒரு சில மாவட்டங்களில் சிகரெட் வடிவ மிட்டாய்கள் விற்பனையில் இருப்பது தெரிய வந்தது. எனவே தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட கடை மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராமபாண்டியன் உத்தரவின் பேரில் சந்திரமோகன் உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள் அப்போது 150 க்கும் மேற்பட்ட கடைகளில் மிட்டாய் சாம்பிள்கள் எடுக்கப்பட்டன இதில் மதுரையில் பல்வேறு கடைகளில் சிகரெட் மிட்டாய்கள் விற்பனையில் இருப்பது தெரியவந்தது எனவே சம்பந்தப்பட்ட கடைகாரர்களிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர் அப்போது செல்லூர் பகுதியில் சிகரெட் மிட்டாய் தயாராகி விற்பனைக்கு வருவது தெரியவந்தது.இதனை அடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செல்லூரில் அதிராடி சோதனை நடத்தினர் இதில் அங்குள்ள 2 நிறுவனங்களில் சிகரெட் வடிவ மிட்டாய்கள் தயாரிப்பது தெரிய வந்தது.இதனை தொடந்து அந்த நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்