மதுரையில் தொழிலதிபரை ஏமாற்றி ரூ.13.5 லட்சம் மோசடி
மதுரை ஜரிகைக்கார தெருவை சேர்ந்தவர் அமீர்முகமது (வயது 37). தொழில் அதிபரான இவர் திடீர் நகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு ஜிம் பயிற்சியாளர் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம், இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
இதனை நம்பிய நான் அவர்களிடம் 11 லட்சம் ரூபாயை கொடுத்தேன். இது தவிர 2.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொடுத்தேன்.
ஆனால் ஸ்வேதா குழுவினர் ஜிம் நடத்துவ தற்கான பணிகளில் ஈடுபட வில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் லோகேஸ்வரி அவர்கள் ஸ்வேதா, பிரியதர்ஷினி, ஸ்வேதா அத்தை, மற்றும் அவரது மகள் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றார்.