
மதுரையில் ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்
மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் 880 ரேரைஷன் கடைகள் உள்ளன. இதில் 920 க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தடை பட்டது மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கூட்டுறவு சங்க அணைத்து பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதன் பிறகு மாவாட்ட செயலாளர் ஆசிரியதேவன் கூறுகையில் பொது மக்களுக்கு தரமான அரிசி வினியோகம் செய்ய வேண்டியது நுகர் பொருள் வாணிப கழகத்தின் கடமை.அங்குள்ள தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஒப்புதலுக்கு பிறகுதான் அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
நுகர் பொருள் வாணிபக் கழகம் அனுப்பும் சில மூடைகளில் அரிசி தரம் குறைந்துள்ளது.இது தொடர்பாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.ஆனால் இதற்கு ரேஷன் கடை பணியாளர்களை பொறுப்பாளி ஆக்குகின்றனர் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது காஞ்சிபுர மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் செயலர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்
இதனை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவாதாக கூறினார்கள். மேலும் அவர்கள் கூறியதாவது எங்கள் கோரிக்கைகக்கு செவி சாய்க மறுத்தால் வருகிற 4 ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
