





காரிமங்கலம் அருகே பூட்டி இருந்தால் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் கொள்ளை
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பொம்மஅள்ளி கிராமத்தில் நாகராஜ் என்பவரின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பாலக்கோடு டிஎஸ்பி தினகரன் தலைமையிலான போலீசார் குழு நேரில் சென்று கொள்ளையர்கள் விட்டுச் சென்றிருந்த தடயங்கள் கைப்பற்றி விசாரணை நடத்தினர் .
வீட்டிலிருந்து சுமார் 20 பவுன் தங்க நகைகளுக்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் பீரோக்களில் இருந்து சுமார் 14 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது காகிதம் ஒன்றில் சுருட்டி மறைவான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 7 பவுன் தங்க நகைகள் கொள்ளை அவர்களுக்கு தெரியாமல் போனதால் அந்த நகைகள் நல்வாய்ப்பாக தப்பி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது,
நாகராஜின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பூட்டி இருந்தால் வீட்டின் நோட்டமிட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டுருக்கின்றனர்.
பொம்மஅள்ளி பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுவோரின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து இப்பகுதியில் சமீபகாலமாக போலீசார் இரவுநேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி வந்தனர், இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
