
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு தொடர் ஓட்டப்பந்தயம்
தேனி மாவட்டம்
மார்ச் – 8
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு தொடர் ஓட்டப்பந்தயத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவப்பிரசாத்,இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.. தேனி பங்களாமேட்டில் தொடங்கி நேருசிலை வழியாக மேனகாமில் மைதானத்தில் நிறைவுற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்..
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.
