
42 வது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து பல வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் கலந்துகொண்ட திரு சிதம்பரம் அவர்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும் தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.
அதேபோல் திரு முருகேசன் அவர்கள் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
மேலும் திரு ராஜா அவர்கள் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும் வட்டு எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார்.
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும் பெற்றார்.
மேற்படி 42 வது தேசிய மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற்று மதுரை மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த பதக்கம் பெற்ற நால்வரும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் மேற்படி நால்வரையும் பாராட்டினார்கள் அதேபோல் வரும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
