


அழகர் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இருந்த பொருட்களை திருடிய நபர் கைது, திருடிய பொருட்கள் கண்டுபிடிப்பு.
அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில், ராஜேஷ்ஐயர்சங் 34 என்பவர், தான் அழகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட காரில் வந்ததாகவும், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்தி விட்டு அதில் செல்போன் மற்றும் லேப்டாப் வைத்து விட்டு திரும்ப வந்து பார்த்த போது காரின் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை யாரோ திருடிச் சென்று விட்டதாக புகார் கொடுத்திருந்தா
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்த, கோபாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து, மேற்படி திருடுபோன பொருட்களை பறிமுதல் செய்து, திருட்டில் ஈடுபட்ட மேற்படி நபர் மீது போலீசார் மேல்நடவடிக்கை எடுத்தனர்
