
குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது மதுரை போலிஸ் கமிஷனர் அவர்களின் அதிரடி நடவடிக்கை
மதுரையில் நடப்பாண்டில் 24 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் ரவுடிகள் 2 பேர் கஞ்சா வியாபாரிகள் 4 பேர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்.
மதுரையில் சட்ட விரோத கும்பல் மீதுகுண்டர் சட்டமின்றி Crpc 109,110 பிரிவுகளின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர அளவில் Crpc 109 சட்டப்பிரிவின் கீழ் 106 பேரிடம் பிரமாணப்பத்திரம் கையெழுத்து பெறப்பட்டு உள்ளது. அதில் 6 பேர் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்தபடியாக Crpc 110 ன் கீழ் 333 பேரிடம் பிரமாணப் பத்திரம் பெறப்பட்டுள்ளது அதில் 52 பேர் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகரை பொறுத்தவரை 109,110 சட்டப்பிரிவிகளின் கீழ் 439 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. அவர்களில் 58 பேர் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகரில் சட்ட ஒழுங்கு அமைதியை பேனுவதற்கான நடவடிக்கைககளில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்பட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் இவ்வாறு மதுரை போலிஸ் கமிஷனர் திரு. செந்தில்குமார் அவர்கள் கூறினார்.
