
புதுக்கோட்டை மாவட்டம்¸ நகர காவல் நிலையம் 1928ம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 90 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 91-ம் ஆண்டு விழா காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் காவல் ஆய்வாளர் திரு. பரவாசுதேவன் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை அரசு பார்வையற்றோர் பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், வெந்நீர் பயன்படுத்தும் வகையிலான சுமார் 25 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம் மற்றும் ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது.