



காவல் துறையில் S.S.I களுக்கு உள்ள அதிகாரம் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்
தகவல் உரிமை சட்ட தகவலில் விளக்கம்…!
(சிறப்பு உதவி ஆய்வாளர் – Special Sub Inspector)
எஸ்.எஸ்.ஐ.,க்களுக்கு எவ்வித தனிப்பட்ட அதிகாரமும் வழங்கப்படவில்லை, என போலீஸ் இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.,) பதவிகளுக்கு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்படவில்லை. இப்பதவிகள் தலைமை காவலர் பதவியிலிருந்து நிலை உயர்த்தப்பட்ட பதவி. இவர்கள் தலைமை காவலர்களாகவே கருதப்படுவர். தலைமை காவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரமே எஸ்.எஸ்.ஐ.,க்கும் பொருந்தும்.
தலைமை காவலருக்கும், எஸ்.ஐ.,க்கும் உள்ள வேறுபாடே எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கு உள்ள அதிகார வேறுபாடாகும்.
பதிலுடன் இணைப்பாக தரப்பட்டுள்ள “போலீஸ் ஸ்டாண்டிங் உத்தரவு’தகவல்கள்: காவல் நிலைய அதிகாரி: எஸ்.ஐ., பொதுவாக காவல் நிலைய அதிகாரியாவார். பெரிய ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் காவல் நிலைய அதிகாரியாக இருப்பார்.
புலன் விசாரணை: முடிந்தளவு எஸ்.ஐ.,அந்தஸ்திற்கு கீழ் இல்லாதவர்கள் தான் புலன் விசாரணை நடத்த வேண்டும்.
தலைமை காவலர்: நிலைய அதிகாரி உத்தரவின் பேரில் பணி பார்க்க வேண்டும். அவர் இல்லாதபோது சிறுசிறு வழக்குகளை பதிவு செய்யலாம். இவ்வாறு தகவல் தரப்பட்டுள்ளது.
