Police Department News

மதுரையில் கந்து வட்டி வழக்கில் ஒருவர் கைது

மதுரையில் கந்து வட்டி வழக்கில் ஒருவர் கைது

மதுரை காமராஜர் புரம் கக்கன் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி செல்வி என்பவர் தனது குடும்ப கஷ்டத்திற்காக அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகியோரிடம் ரூபாய் 1,85,000 வட்டிக்கு கடனாக பெற்று அதற்காக மாதந்தோறும் வட்டித் தொகை 10,000/- செலுத்தி வந்துள்ளனர் இந்த நிலையில் கடந்த 2 மாதகாலமாக வட்டி தொகையினை செல்வி செலுத்தவில்லை என்பதால் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகிய இருவரும் செல்வியின் வீட்டிற்கு பலமுறை சென்று செல்வி மற்றும் அவரது குடும்பத்தாரை பார்த்து வாங்கிய பணத்தை வட்டியோட திருப்பிதர கேட்டு அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக செல்வி கீரைத்துறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆறுமுகம் மற்றும் பூரணம் ஆகியோர் மீது கீரைத்துறை காவல் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு பதிவு செய்து ஆறுமுகம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 புரோ நோட்டுகளை கைபற்றி பின் நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்

மதுரை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் இம்மாதிரியான கந்து வட்டி கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள் எவராவது இருப்பின் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மேலும் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுமென மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்

Leave a Reply

Your email address will not be published.