
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது. 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த நகர் உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 22.06.2022 ம் தேதி தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட N.S நகரைச் சேர்ந்த குமார் (39) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயுடு மஹாலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் தேனி ஆனந்தம் ஜவுளிக்கடையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர் திருடி சென்றது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வந்தது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக திண்டுக்கல் நகர் உட்கோட்ட தனிப்படையினர் தீவிர தேர்தல் வேட்டை நடத்தியும், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் திண்டுக்கல் தெற்கு ரதவீதி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவராஜ் (58) என்பவர் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது, தனிப்படையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
