பன்னியள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வந்தவர் கைது.
தர்மபுரி மாவட்டத்தில் போதை பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் 2.0 நடவடிக்கையின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாரண்டஅள்ளி காவல்துறைக்கு பன்னியள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இதை தொடர்ந்து பன்னியள்ளி கிராமத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை பன்னியள்ளி கிராமத்தில் சரவணன் வயது 45 அவரது விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட சுமார் 5 அடி கொண்ட 3 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார், இதனை காவல்துறை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.