Police Recruitment

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதம்

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கொப்பனாப்பட்டியில் 22.07.2018 ஆம் தேதியன்று 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை 14.07.2021ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாண்புமிகு மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர். திருமதி.R.சத்யா அவர்கள் மேற்படி குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் கட்ட தவறினால் 1 வருடம் கடுங்காவல் சிறைத்தண்டணையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் திருமதி.அங்கவி அவர்கள் ஆஜரானார்கள்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1,50,000 / அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கினை சிறப்பாக புலன்விசாரணை செய்த காவல் ஆய்வாளர் திருமதி.செந்தமிழ்செல்வி திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையம், (தற்போது அனைத்து மகளிர் காவல் நிலையம், திருவரம்பூர் திருச்சி மாவட்டம்) மற்றும் நீதிமன்ற பணிக்காவலர் முதல் நிலை காவலர் 342 திருமதி. வளர்மதி ஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். தீர்ப்புக்கு பின்னர் மேற்படி குற்றவாளி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் .

Leave a Reply

Your email address will not be published.