

விபத்துகளை தடுக்க விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் போக்குவரத்து துணை ஆணையரின் அதிரடி
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகச்சாமி அவர்களின் உத்தரவின் பெயரில் மதுரை மாநகர் முழுவதும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக ஒருவழி பாதையில் (no entry )செல்லும் வாகனங்களுக்கு, குறிப்பாக ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.. இதில் ஒரே நாளில் 200 க்கு மேற்பட்ட ஆட்டோக்களுக்கும்..600 க்கும் மேற்பட்ட இதர வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையில் சென்ற விதிமீறலுக்காக மொத்தம் 80,000 ரூபாய்.அபராதம் வசூலிக்கப்பட்டது
தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.தங்கமணி. அவர்கள் முனிச்சாலை பகுதியில் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்து, விதிறைகளை மீறுவதால் ஏற்படும் தீமைகளை வாகன ஓட்டிகளுக்கு எடுத்து கூறி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்..
