Police Department News

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதில் ரேஷன் அரிசி கடத்திய 3 நபர்கள் கைது

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதில் ரேஷன் அரிசி கடத்திய 3 நபர்கள் கைது

திருப்பரங்குன்றம் கோவில் அருகே சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருப்பரங்குன்றம் அருகே உள்ள 16 கால் மண்டபம் முன்பு, திருப்பங்குன்றம் V-1 காவல் நிலைய போலிசார் 13/7/2022 மாலை 16. 45 மணி அளவில் ஆய்வாளர் அவர்களின் உத்தரவுபடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பசுமாலை, திருநகரில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக அவனியாபுரத்திற்கு சென்று கொண்டிருந்த டாட்டா, ஏ.சி.வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்
.அப்போது சட்டத்திற்கு விரோதமாக 50 kg கொண்ட 25 மூடைகளில் 1250 kg ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து வாகனத்தை பறிமுதல் செய்த திருப்பரங்குன்றம் போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் மதுரையை சேர்ந்த வசந்த், மற்றும் முத்துமாரி, மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் ரேஷன் அரிசிகடத்திவந்தது தெரியவந்தது.
எனவே பறிமுதல் செய்த வாகனம் மற்றும் 3 பேரையும் குடிமை பொருள் வழங்கல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர்
அவர்கள் மீது குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனனர்.

Leave a Reply

Your email address will not be published.