


திருமங்கலம் அருகே 68 கிலோ குட்கா பறிமுதல், இருவர் கைது!!
மதுரை திருமங்கலம் அடுத்த கூத்தியார்குண்டு பகுதியில் கடை & வீட்டில் பதுக்கி வைத்திருந்த
68 கிலோ குட்காவை
அஸ்டீன்பட்டி போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
கூத்தியார்குண்டு & தப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி அஸ்டீன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர், திரு.சிவலிங்கம் தலைமையில் போலீசார் சோதனை இட்டதில்.
அப்பகுதியை சேர்ந்த ராமர் 38/2022 என்பவர் வீட்டில் 40 கிலோ மற்றும் கடையில் 28 கிலோவும்
மொத்தம் 68 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதைடுத்து அஸ்டீன்பட்டி காவல் துறையினர், ராமர் மற்றும் அவருக்கு குட்கா விற்பனை செய்த கூத்தியார் குண்டு பகுதியை சேர்ந்த சிவசேகர் 58/2022 ஆகிய இருவரையும் கைது செய்து. அவர்கள் இடம் இருந்த குட்காவை பறிமுதல்
செய்தனர்.
