மதுரை முடக்குச்சாலை முதல் H.M.S காலனி வரை மேம் பாலம் கட்டுமான பணி காரணமாக வாகன போக்கு வரத்து மாற்றுப் பாதை காவல் துறை அறிவிப்பு
மதுரை முடக்கு சாலை முதல் H.M.S. காலனி வரை 1190 மீட்டருக்கு மேம் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது இதில் தற்போது கான்கிரீட் பில்லர்கள் அமைக்கும் பணி நடைபெறுவதால் முடக்கு சாலை சந்திப்பு முதல் T.V.S. ரப்பர் கம்பெனி வரையிலான சாலையினை தற்காலிகமாக முற்றிலும் தடை செய்ய வேண்டிய சூழல் உள்ளது.இந்நிலையில் மதுரை நகரிலிருந்து முடக்கு சாலை தேனி மெயின் ரோடு T.V.S ரப்பர் கம்பெனி வழியாக தேனி மெயின் ரோடு மூலம் வெளியூர் சென்ற பேருந்துகள் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து ரக வாகனங்ளும் முடக்கு சாலை சந்திப்பு முதல் TVS ரப்பர் கம்பெனி வரை செல்ல தடை செய்யப்படுகிறது முடக்கு சாலை சந்திப்பு வழியாக TVS ரப்பர் கம்பெனி நோக்கி சென்ற இருசக்கர வாகனங்கள் ஆட்டோ இலகுரக வாகனங்களின் வழித்தடங்கள் 24 ம் தேதி முதல் பாலம் கட்டுமானப்பணி முடியும் வரை கீழ் கண்டவாறு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை நகரிலிருந்து வரும் பேருந்துகள் கனரக வானங்கள் அனைத்தும் T.VS ரப்பர் கம்பெனி வழியாக தேனி சாலை செல்ல. தடை செய்யப்படுகிறது. 24 ம் தேதி முதல் இவ்வாகனங்கள் முடக்கு சாலை கோச்சடை துவரிமான் நான்கு வழிச்சாலை வழியாக. மட்டுமே செல்ல வேண்டும்.மதுரை நகரிலிருந்து வெளியூர் செல்லும் 2 , மற்றும் 3 சக்கர வாகனங்கள் கார் மினி வேன் போன்ற இலகு ரக பயனிகள் வாகனங்கள் மற்றும் தடம் எண் 21 கொண்ட அரசு நகர பேருந்துகள் மட்டும் காளவாசல் சந்திப்பு சம்மட்டிபுரம் TVS ரப்பர் கம்பெனி முதல் HMS காலனி சந்திப்பு வழியாக விராட்டிபத்து மற்றும் அச்சம்பத்து வழியாக செல்லலாம்
நாகமலைபுதுகோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழியாக நகருக்கு வரும் இரு சக்கர வாகனங்கள் 3 சக்கர வாகனங்கள் கார் மினி வேன் போன்ற இலகு ரக வாகனங்கள் வழக்கம் போல் அச்சம்பத்து விராட்டிபத்து டோக் நகர் திரும்பி கோச்சடை முடக்குசாலை வழியாக நகருக்கு செல்ல வேண்டும்.
நாகமலைபுதுக்கோட்டை நான்கு வழிச்சாலையிலிருந்து அச்சம்பத்து வழியாக நகருக்கு வரும் பேருந்துகள் கன ரக வாகனங்கள் வர விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. மேற்படி வாகனங்கள் நான்கு வழிச்சாலை துவரிமான் கோச்சடை முடக்குசாலை வழியாக நகருக்குள் வர வேண்டும்
இதில் அரசு மினி பேருந்துகள் மட்டும் விராட்டிபத்து அச்சம்பத்து ஆகிய பகுதியிலிருந்து டோக் நகர் வழியாக. பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லலாம்.
எனவே பொது மக்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் மேற்கண்ட வாகன போக்குவரத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்