மதுரை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் சொத்துகள் முடக்கம்.மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பேட்டி.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஆஸ்டீன்பட்டி மற்றும் சேடபட்டி மற்றும்
N. P. கோட்டை காவல் நிலையங்களில் பதிவான 5 கஞ்சா வழக்குகளில் இதுவரை குற்றவாளின் 8 கோடி 18 லட்சத்து 9 ஆயிரத்த் 2 ருபாய், அசையும் & அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுயுள்ளது.
சமூக வலைத்தளங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா, என கண்காணிக்கப்படுகிறது.
ஆந்திராவில் இருந்துதான் கஞ்சா வருகிறது, ஆந்திரா, ஒடிசா எல்லையில் இருந்து கஞ்சா வருகிறது. இந்த வருடத்தில் சுமார் 150 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் 1000 கிலோ கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஒட்டூனர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.