சென்னை திருமுல்லைவாயலில் சிறப்பு காவல்படை காவலர் வெங்கடேசன்(31) பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்குளித்ததில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் வெங்கடேசன்தீக்குளித்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்: திரு சந்தோஷ் அம்பத்தூர்
குமரி மாவட்டத்துக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில்,குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம்தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருவாரூர், நீலகிரி உள்பட 16 இடங்களில் பணியாற்றி வந்த போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக […]
பாலக்கோடு அருகே வயகரா மாத்திரை விற்ற போலி டாக்டர் கைது . தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் சாந்தி அவர்களுக்கு புகார்கள் சென்றனஇதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் .பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், சர்க்கரை ஆலை பகுதியில்அதிரடி சோதனை […]
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ஊராட்சி டேங்க் ஆபரேட்டரை தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற தாய்-மகளை போலீசார்கைது செய்தனர் . பாப்பாரப்பட்டி அருகே உள்ள சிட்லகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவரது மகன் சிவசங்கர் (வயது 32). இவர் ஊராட்சி மன்றத்தில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். சிவசங்கர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சிவசங்கர் வீட்டின் அருகே மாசிலாமணி-சஞ்சீவி தம்பதியினர் […]