
மதுரை சம்மட்டிபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
மதுரை எஸ்.எஸ். காலனி சம்மட்டிபுரம் மெயின் ரோடு பள்ளிக்கூடம் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக எஸ்.எஸ்.காலனி போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர் அப்போது அங்கு பதுங்கி இருந்த அச்சம்பத்து சந்தானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் ஸ்டீபன்ராஜ் வயது 19/22, என்பவர் 50 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார்
அதே போல் மதுரை விராட்டிபத்து சுடுகாடு அருகே 25 கிராம் கஞ்சாவுடன் சம்மட்டிபுரம் பாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் வயது 26/22, என்பவரை எஸ்.எஸ்.காலனி போலிசார் பிடித்தனர் அவர்கள் இருவரும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
மதுரை வண்டியூர் தியேட்டர் பின்புரம் கஞ்சா விற்கப்படுவதாக. அண்ணாநகர் போலிசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கே பதுங்கியிருந்த வாலிபரை பிடித்தனர் அவரிடமிருந்து 45 கிராம் கஞ்சா மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் சிவகெங்கை மாவட்டம் கட்டமான் கோட்டை பகுதியை சேர்ந்த நீலமேகம் என்ற பண்டாரி வயது 35/22, என்று தெரிய வந்தது. அவரை அண்ணாநகர் போலிசார் கைது செய்தனர்.
