மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் நேற்று (20.11.2019) ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவில்
22 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஜெய்ஹிந்துபுரம் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து 22 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தமைக்காக காவல் ஆணையர் அவர்கள் அனைவரையும் பாராட்டினார். ஒன்பது தெருக்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் பதிவுகளை மூன்று இடங்களில் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்