சென்னையில் ஒரு வாரத்தில் 20 கஞ்சா குற்றவாளிகள் கைது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடந்த ஒரு வார கடுஞ் சோதனையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 13 வழக்குகள் பதியப்பட்டு 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
சென்னையில் காஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தி வருபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால் அவர்கள்
போதை தடுப்புக்கான நடவடிக்கை மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதின் பேரில் இணை ஆணையர்கள் ஆலோசனையின் பேரில் துணை ஆணையாளகள் கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக காண்காணித்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது. தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்து 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 31.85 கிலோ கஞ்சா 8 கிராம் மெத்தம் பெட்டமைன் 1200 உடல் வலி நிவாரண மாத்திரைகள் 6 செல் போன்கள் ரொக்கம் 200 ₹, 5 இருசக்கர வாகானங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சாங்கர் ஜிவால் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்