
மதுரையில் நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது. ஒருவர் தப்பி ஒட்டம் போலீசார் தேடி வருகிறார்கள்
மதுரை அருகே போதை மாத்திரை விற்ற இருவரை போலீசார் கைதுசெய்தனர், மற்றும் போதை மாத்திரைகள், விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் செல் போனையும் பறிமுதல் செய்தனார்.
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது.
கீழமாத்தூர் பகுதியில் அங்கு உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் மதுரை செல்லூர் பந்தல்குடி, சுயராஜ்ஜியபுரம் பகுதியை சேர்ந்த சதிஷ் வயது 24/2022, மற்றும் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சோலையழகுபுரத்தைசேர்ந்த யோகராஜ் வயது 24/2022 என்பது தெரிய வந்தது.
இவர்கள் இடம்இருந்து போதைக்கு பயன்படுத்தப்படும் 150 மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்ததும் முதல் கட்ட விசாராணையில் தெரிய வந்தது.
இதையடுத்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் இருவரையும் கைதுசெய்து, 150 போதை மாத்திரைகள், இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பள்ளி அருகில் நின்ற பந்தல்குடியை சேர்ந்த காசி என்பவர் மனைவி தப்பி சென்றார் பந்தல்குடியைச் சேர்ந்தகாசிஎன்பவர் மனைவி அபிராமியை நாகமலை புதுக்கோட்டை போலீசார் தேடிவருகின்றனர்.
