
மதுரை காமராஜபுரம் பகுதியில் மருந்து கடையில் போதை மாத்திரை விற்பனை. கடை உரிமையாளர் கைது தெப்பக்குளம் போலிசார் அதிரடி நடவடிக்கை
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி கூடத்தில் சிறுவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்துவதாக தெப்பக்குளம் போலிசாருக்கு ரகசிய தவவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலிசார் சிலரை பிடித்து விசாரித்தனர் அப்போது காமராஜர் சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மாடசாமி அவர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினார் அப்போது அங்கு பெட்டி பெட்டியாக போதை மாத்திரைகள் கைபற்றப்பட்டன. இதனை தொடர்ந்து மருந்து கடை உரிமையாளர் தங்கராஜ் வயது 38/22, என்பவரை தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு. மாடாசாமி அவர்கள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
