
மதுரை போக்குவரத்து காவல்துறையில் போக்குவரத்து காப்பாளர்காளாக பணிபுரிய சேவை மனப்பாண்மையுடன் கூடிய தன்னார்வளர்கள் தேவை
மதுரை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் பெருமை வாய்ந்த இந்த கோவில் நகரத்திலும் மற்றும் நகர்புர வியாபார ஸ்தலங்களிலும் பொதுமக்களுக்கு வழிகாட்டவும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை போன்ற காலங்களில் காவல்துறையினருக்கு உதவிகரமாக சமுதாய காவல் பணியை சீருடையில் செய்வதற்கு போக்குவரத்து காப்பாளர்கள் என்ற தன்னார்வ அமைப்பு தமிழக அரசின் உத்தரவின் படி செயல்பட்டு வருகிறது இவர்கள் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு வழங்குவது போக்குவரத்து பிரச்சனைகளை குறைக்க ஆலோசனை தருவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குழுக்களை ஏற்படுத்துவது போன்ற பணிகளிலும் தங்களை சிறப்புடன் ஈடுபடுத்தி வருகின்றனர்.
மதுரை மாநகருக்கு தமிழக அரசால் 200 காப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில் 40 காப்பாளர்களே தற்போது உள்ளதால் மேலும் 160 தன்னார்வ தொண்டுள்ளம் கொண்ட காப்பாளர்களை சேர்த்து மதுரை மாநகரில் போக்குவராத்து நெரிசல்களை குறைத்து விபத்துக்களை தடுத்து சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. T.செந்தில்குமார் இ.கா.ப. அவர்களின் அறிவுறையின்படி மாதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சீரமைப்பிற்கு காலியாக உள்ள 160 போக்குவரத்து காப்பாளர்கள் கீழ் கண்ட பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பகுதிக்கு 10 பேர்
திலகர் திடல் பகுதிக்கு 10 பேர்.
கரிமேடு பகுதிக்கு 25 பேர்
தல்லாகுளம் பகுதிக்கு 25 பேர்
மதிச்சியம் போக்குவரத்து 20 பேர்
தெற்கு போக்குவரத்துக்கு 10 பேர்
தெற்குவாசல் போக்குவரத்து 10 பேர்
தெப்பக்குளம் போக்குவரத்து 10 பேர்
திருப்பரங்குன்றம் போக்குவரத்து 20 பேர்
அவணியாபுரம் போக்குவரத்து 20 பேர்
மொத்தம் 160 பேர்.
இது ஒரு தன்னார்வ அமைப்பு என்பதால் இந்த பணிக்கு ஊதியம் எதுவும் அளிக்கப்படாது என்பதால் சமூக சேவை செய்ய விறும்பும் பட்டதாரிகள் அரசு அலுவளர்கள் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் விரிவுறையாளர்கள் தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் அனைவரும் இந்த அமைப்பில் சேரலாம் இந்த மைபில் சேர்ந்து பணிபுரிய விரும்பும் நபர்களின் வயது 25 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும் மதுரை நகரில் போக்குவரத்து காப்பாளார்கள் வாரம் 2 நாட்கள் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு மாநகரில் முக்கிய இடங்களில் காவலர்களோடு போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடுவார்கள் மேலும் திருவிழா மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும் இவர்கள் காவல் துறையினருக்கு உதவ அழைக்கப்படுவார்கள் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை காலை 6.30 மணிக்கு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சி அளிக்கப்படும் இந்த தன்னார்வ அமைப்பில் சீருடையில் மக்கள் பணி செய்ய விரும்புவோர் dctrafficmc2010@gmail.com மின்னஞ்சல் மூலமாகவோ காவல் துணை ஆணையர் அலுவலகம் காவல் கூடத்தெரு தெற்காவணி மூல வீதி மதுரை 1 என்ற அலுவலகத்தில் நேரடியாகவோ 15.08. 2022 க்குள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
