
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மதுரை மாநகர் காவல் ஆய்வாளர்
16 ஆவது அனைத்து இந்திய காவல்துறை சிறகு பந்து போட்டி கடந்த 17.03.24 முதல் 23.03.24 வரை தெலுங்கானா மாநிலம், ஹைதெராபாத்தில் நடைபெற்றது. இதில் 29 மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக அணி சார்பாக மதுரை மாநகர காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமமாலா அவர்கள் (ஆள்கடத்தல், மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு )கலந்து கொண்டு தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டு தங்க பதக்கங்கள் வென்றுள்ளார். மதுரை மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பதக்கம் வென்ற ஆய்வாளரை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
