


விருதுநகர் மாவட்டம்:-
ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் குற்றங்கள் நடந்தேரி வருகின்றன.
அதிலும் சமீப காலமாக வளரும் தலைமுறையான மாணவ செல்வங்கள் போதை வஸ்த்துக்கள் மூலம் பாதைமாறி சென்று வருகின்றனர்.
அதனை தடுக்கும்படியாக விருதுநகர்
மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. ஆ.மணிவண்ணன் அவர்கள் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை கல்லூரியில் பயிலும் மாணவ,
மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
மேலும் போதை பொருள் தடுப்பை வலியுறுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள்,கல்லூரி பேராசிரியர் பலரும் கலந்துகொண்டனர்.
செய்தி உதவி
S.ரெங்கராஜ்
