Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பெண்கள் உட்பட 6பேர் கைது

மதுரை செல்லூர் பகுதியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் 4 பெண்கள் உட்பட 6பேர் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே அவற்றை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆலோசனை பேரில், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் ரீகன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் நேற்று மாலை வைகை வடகரை சர்வீஸ் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கு பதுங்கி இருந்த பெண்கள் தப்பி ஓடினர். இருந்தபோதிலும் அவர்களில் 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கண்ட 6 பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் மேலதோப்பு தேவேந்திரன் மனைவி செல்வி (வயது 52), கீழத்தோப்பு ஜோதிபாசு (வயது 27), கொக்குலத்தாட்சி லைன் சூர்யா (வயது 30), தங்கபாண்டி மனைவி சித்ரா (வயது 37), குபேந்திரன் மகள் மணிமாலா (வயது 40), ராஜேந்திரன் மனைவி தமிழரசி (வயது 55) என்பது தெரிய வந்தது. இவர்களில் செல்வியும் சூர்யாவும் தாய்-மகன் ஆவர். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உறவினர்களுடன் இணைந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்து உள்ளனர்.

செல்லூர் போலீஸ் நிலையத்தில் செல்வி மீது 7 வழக்குகளும், சித்ரா மீது 9 வழக்குகளும், மணிமாலா மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கஞ்சா விற்றதாக மேற்கண்ட 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.