Police Department News

சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன

சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் சிறப்பு பதக்கங்கள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன

பொது மக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு, சீரிய பணியாற்றியவர்களுக்கு, சுதந்திர தின விழாவையொட்டி, சிறந்த பொது சேவைக்கான, முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்.
அந்த வகையில், சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்

பிரேமாஆனந்த் சின்ஹா;

கடலுார் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்.

சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையம், சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் சிவராமன்;

மதுரை மதிச்சியம் போக்குவரத்து சப் – இன்ஸ்பெக்டர் பழனியாண்டி;

தாம்பரம், செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் குமார்

ஆகியோருக்கு, இந்த ஆண்டுக்கான, முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, புலன் விசாரணை பணியில், மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில், பத்து காவல் துறை அதிகாரிகளுக்கு, முதல்வரின் காவல் சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின்;

சேலம் குற்றப் புலனாய்வுத் துறை டி.எஸ்.பி., கிருஷ்ணன்;

விழுப்புரம் மாவட்டம், ரோஷனை
போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா;

நாமக்கல் மாவட்டம், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் பிரபா

ஆகியோர், இந்த ஆண்டு பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், சென்னை, கோடம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்;

கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி;

நாகப்பட்டினம் மாவட்டம், கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி;

பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு சப் – இன்ஸ்பெக்டர் துளசிதாஸ்;

சென்னை ஒருங்கிணைந்த குற்ற அலகு குற்றப் புலனாய்வுத் துறை சப் – இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி;

அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப் – இன்ஸ்பெக்டர் இளையராஜா

ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.விருதுகள் பெறுவோர், ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடை தங்கப்பதக்கம், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். பின்னர் நடக்கும் விழாவில், முதல்வரால் இந்த விருதுகள் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.