மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் மது வேட்டை, 144 மது பாட்டில்கள் பறிமுதல், கொட்டாம்பட்டி போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி வட்டாரப்பகுதிகளில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொட்டாம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சுதன் அவர்கள் ரோந்து சென்றார். அப்போது காடம்பட்டி பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் தெய்வேந்திரன் வயது 30/21, என்பவர் காடம்பட்டி விளக்குப் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனே அவனை கைது செய்து அவனிடமிருந்து 144 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, நிலையம் அழைத்து வந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.