
தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிசிடிவி கேமரா எஸ்பி கலைச்செல்வன் துவக்க விழா நடந்தது.
தர்மபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமரா துவக்க விழா நடந்தது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிசேகர் வரவேற்று பேசினார். டிஎஸ்பி வினோத் வாழ்த்தி பேசினார். மொத்தம் 16 சிசிடிவி கேமராவை துவக்கி வைத்து
மாவட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வன் பேசியது மாணவர்கள் சமுதாயத்திற்கு கேடான அல்ப சந்தோஷத்திற்கு ஆசைப்பட வேண்டாம். அவ்வாறு ஆசைப்பட்டால் இந்த பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாக நேரிடும். படிப்பில் போட்டியிடுங்கள். நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள். மைனர் வயதில் திருமணம் செய்வது குற்றமாகும். நண்பர்களை சம்பாதியுங்கள். குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வழக்கில் சிக்கினால் வாழ்க்கையை வீணாகிவிடும். படிக்கும் மாணவர்கள் புள்ளிங்க ஹேர் ஸ்டைலை தவிர்க்க வேண்டும் என பேசினார். இதை அடுத்து மாணவ மாணவிகள் போதை தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி காளியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காமராஜ், மூர்த்தி, இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் S.செல்லம்
