
75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலக்கோடு சார்பில் 7-வது இரத்த.தான முகாம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாலக்கோடு கிளை சார்பில் 7-வது இரத்த தான முகாம் நடைப்பெற்றது. முகாமைகிளை தலைவர் காலித் தொடங்கி வைத்தார். இரத்த தானசெய்ய முன்வந்த இளைஞர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து. இதில் 120 பேருக்கு மேல் இரத்த தானம் வழங்கினார்கள். இதனை தரும்புரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாமில் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள் தலைமைமருத்துவர் பாலசுப்ரமணியம்.மாவட்ட மருத்துவரணி செயலாளர் சமியுல்லாஹ். கிளை செயலாளர் மொக்தியார். கிளை பொருளாளர் அமீர் ஜான்.ஆகியோர் முன்னிருந்து முகாமை நடத்தி வைத்தனர். இந்த முகாமில் இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
