
சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
17.08.2022
கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ₹12,190 பணம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் N.சேகர் கிருஷ்ணகிரி மாவட்டம்