


5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் ஒரு பெண் உட்பட இருவர் கைது
தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் போலீசாரிடம் 10 நாட்கள் கண்காணிப்பில் பிடிபட்டது. தர்மபுரி சேலம் மாவட்ட எல்லையான பூசாரிபட்டியில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பூங்கொடி( 65) அவரது மகன் தங்கவேல் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா பதுக்கிய வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த பெண்மணி தர்மபுரி சேலம் ஈரோடு மற்றும் மாதேஸ்வரன் மலை உட்பட பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு கஞ்சா பிடிப்பது இதுவே முதல்முறை என போலீசார் தெரிவித்தனர். மேலும் தர்மபுரியில் மாணவர்கள் உட்பட சில்லறை விற்பனையாளர்கள் 74 நபர்கள் மற்றும் அதிக அளவில் கஞ்சா பயன்பாட்டில் உள்ள 12 கிராமங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தர்மபுரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோத் தெரிவித்தார்.
