


பாலக்கோடு அருகே அண்ணாமலை அள்ளி நெடுஞ்சாலையில் கூலி தொழிலாளி நள்ளிரவில் வெட்டி கொலை .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு நள்ளிரவில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனம் கவிழ்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்,
இதை அவ்வழியாக சென்ற பொது மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீசார், உடலை பார்த்த போது கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது, விசாரித்ததில் இறந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உள்ள கருக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சூரியா(41) என்பதும் அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருப்பது தெரிய வந்தது.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா, மது குடிக்கும் தகராறில் நடந்ததா அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் பாலக்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
