
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் டூ வீலரில் செல்பவர்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இரு திருடர்கள் கைது 9 பவுன் நகைகள் பறிமுதல்
மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதியான சோழவந்தான், சமயநல்லூர், வாடிப்பட்டி பகுதிகளில் தனியாக டூ வீலரில் செல்லும் பெண்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செயின் பறிப்பு குற்றங்கள் நடைபெறுவதாக காவல்நிலையத்தில் வந்த புகார்கள் குறித்து
திருடர்களை பிடிக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவபிரசாத் அவர்களின் உத்தரவின் கீழ் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு
வழிப்பறி திருடர்களை தேடி வந்த நிலையில்.
சோழவந்தான் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருத்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஒரு டூ வீலரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் இரு வாலிபர்கள் வேகமாக சென்றனர். உடனடியாக விரட்டி சென்று அவார்களை பிடித்து இருவரையும் விசாரித்த போது, இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்
என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சோழவந்தான் காவல்நிலைய ஆய்வாளர், விசாரணையில் இருவரும் மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர்கள்
1) சதிஷ் குமார், வயது 19/2022
2)பழனி முருகன்,வயது 19/2022 என்பது தெரிய வந்தது.
அவர்கள் இடம் இருந்த, 9 பவுன் நகையையும் மீட்க்கப்பட்டு,
இருவரையும் கைது செய்து சோழவந்தான் காவல்நிலையத்தில்வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
