மதுரை மாநகர் அவனியாபுரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மீனாட்சிநகர் எம்.ஜி.ஆர் தெருவில் நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் ஓர் கும்பல் போதையில் ரகளையில் ஈடுபட்டனர். சுமார் 20 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 காரை அடித்து சேதப்படுத்தினர். மேலும் அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரையும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி :டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார் கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் சுரேஷ்பாபு வரவேற்றார். மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்தை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் உதவி ஆளுநர் சுதன் […]
கீழக்கரை அருகே வீடு புகுந்து திருடியவர் கைது இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற தனுஷ் பிரதாப் என்பவரை கீழக்கரை சார்புஆய்வாளர் திரு மாதவன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தின் புதிய காவல் ஆய்வாளராக சிவகாசியிலிருந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் திரு. வெங்கடாஜலபதி அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்பு அவர் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் டி.ஐ.ஜி., விஜயகுமாரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் சார்பு ஆய்வாளர்களுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார், புதிய காவல் […]