




மதுரை மாநகர், தெற்கு வாசல் சரகம், ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையம் பகுதியில் 43 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக இந்து முன்னனி மக்கள் கட்சி சார்பாக எடுத்து சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது
மதுரை மாநகர் பகுதி ஜெய்ஹிந்திபுரம், சோலை அழகுபுரம், வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜீவா நகர், TVS-அழகப்பநகர் அனைத்து பகுதியிலும் உள்ள விநாயகர் சிலைகளை ஒன்று சேர்த்து இந்து முன்னனி மக்கள் கட்சி சார்பாக ஊர்வலம் ஏற்படு செய்துள்ளனர்.
இந்து முன்னனி மக்கள் கட்சி, மதுரை மாவட்ட துணை தலைவர், திரு. மாணிக்கமூர்த்தி அவர்கள் தலைமையில் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டது
ஜீவா நகர் சந்திப்பில் இருந்து விநாயகர் சிலை புறப்பட்டு, ஜெய்ஹிந்துபுரம் 2 வது தெரு மெயின் ரோடு வழியாக பெரியார் பஸ் நிலையம் வழியாக, மதுரை நேதாஜி ரோடு, தெற்காவணி மூல வீதி, கீழ ஆவணி மூல வீதி, வடக்கு மாசி வீதி வழியாக, கீழமாசி வீதி, B-1,காவல்நிலைய பகுதி வந்தடைந்தது
தெற்குவாசல் சரகம் காவல் உதவி ஆணையர், திரு. சண்முகம் அவர்கள் தலைமையில் மற்றும் திருப்பரங்குன்றம் சரகம் அவுனியாபுரம், காவல் உதவி ஆணையர், திரு.செல்வகுமார் அவர்கள்
ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையம், சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்கள் மற்றும் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர், திருமதி ,சந்தானமாரி அவர்கள் மற்றும் திரு, சக்திவேல் சார்பு ஆய்வாளர் மற்றும் சக்தி மணிக்கண்டன், S.காளிதாஸ், S. I பெருமாள் S. I, மற்றும்
SPL டீம், கர்ணன், கிஷோர், மற்றும் DSP டீம், அதிரடி படை காவலர்கள், மற்றும் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் பொது மக்கள் இந்து முன்னனி மக்கள் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டர்கள்.
அதன் பிறகு விளக்கு தூண் பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் விநாயகர் சிலைகள் எடுத்து வரும் வாகனங்களை சோதனைக்கு பின் அதிரடிபடை அனுமதியுடன் வடக்குமாசிவீதி, தெற்குமாசிவீதி, மேலமாசி வீதி வழியாக பழைய ஆதிசொக்கநாதர் கோவில் வழியாக வைகை ஆறு சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
வைகை ஆற்றில், தல்லாகுளம் தீயணைப்பு & மீட்பு பணி காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.
