






பாலக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்
தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்வது வழக்கம் இன்று பாலக்கோடு சிறியது முதல் பெரியது வரை உயரம் கொண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு சிலைக்கு பூ, ஆப்பிள், ஆரஞ்சு, எழுமிச்சை, வெள்ளைஎருக்கன் பூ அருகம்புல் மாலை உள்ளிட்டவைகளால் அலங்கரிக்கப்பட்டு யாகம் வளர்த்து பூஜை செய்து சுவாமிக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது இதையடுத்து சாமிக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் படைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர்.
5ம் நாளான இன்று 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் முக்கிய வீதி வழியாக பஸ்நிலையம் முதல் தக்காளிமண்டி வரை மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து சென்று ஒகேனக்கல் ஆற்றில் கரைத்தனர்.
