
காரிமங்கலம் அருகே விநாயகர் சிலைக்கு அலங்கரிக்கப்பட்ட மின் ஒயரில் சிக்கி தள்ளுவண்டி வியாபாரி உயிரிழப்பு – காரிமங்கலம் போலீசார் விசாரணை
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் இரவு நேரத்தில் சிறிய தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருபவர் மல்லிக்குட்டை கிராமத்தை சேர்ந்த வியாபாரி கிருஷ்ணன் (35) இவர் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்க்கு திரும்பி செல்லும் போது விநாயகர் சதுர்த்திக்காக தெருவில் போடப்பட்டிருந்த சீரியல் லைட் ஒயரில் தள்ளுவண்டியின் மேற்கூரை உரசியது, இதனால் மின்சாரம் பாய்ந்து கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி இரு மகன்கள் உள்ளனர். தகவல் அறிந்த காரிமங்கலம் காவல்துறையினர் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி தள்ளுவண்டிதொழிலாளி உயிரிழந்த சம்பவம் இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
