Police Department News

போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஏ.டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஏ.டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுன்சிலர்களுடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
சமீப காலமாக பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி.ரோடு, தர்மபுரி – ஓசூர் சாலை, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடபட்டி வரை காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பள்ளி வாகனங்களை முறைப்படுத்துவது, காலை மாலை வேளைகளில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரி செய்வது, ஒரு வழிப் பாதை திட்டத்தை செயல்படுத்துவது, பஸ் நிலையத்திற்க்குள் தாறுமாறாக செல்லும் பயனிகள் ஆட்டோக்கள், தள்ளுவண்டிகளை கட்டுப்படுத்துவது,
சரக்கு லாரிகளை குறிப்பிட்ட நேரத்தில் நகருக்குள் வருவதை தடை செய்வது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அடுத்த கட்டமாக வணிகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, டி.எஸ்பி. சிந்து, இன்ஸ்பெக்டர் தவமணி, தாசில்தார் ராஜசேகரன், செயல் அலுவலர் டார்த்தி, மற்றும் பேருராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.