பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் ஆய்வாளர் வேலுதேவன் தலைமையில் நடைபெற்றது.
தற்போது மழைக்காலம் என்பதால் பாதுகாப்பான முறையில் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு தேவையான மின்சாரத்தை பாதுகாப்பான முறையில் எடுக்கவும் மற்றும் சீரியல் வயர்களை குண்டூசி போட்டு தவறான முறையில் எடுக்க வேண்டாம் என்றும் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் அதியமான் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
மின்திறன், மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி முகாம் தேவையின்றி மின்சாரத்தை பயன்படுத்தும் போது மின்வாரியத்திற்கு மின் இழப்பு ஏற்படுகின்றது.மேலும் சில்க் வயர்களை பயன்படுத்தக் கூடாது இதனால் அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை தவிர்க்க வேண்டும். என்றும் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒலி ஒளி பந்தல் அமைப்பாளர்களுக்கு பாப்பாரப்பட்டி காவல் நிலையம் சார்பில் அறிவுரைகளை வழங்கினர். மேலும் இக்கூட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் மூர்த்தி அவர்கள் பந்தல் அமைப்பு மற்றும் மின் இணைப்பு குறித்து விளக்கினார்.