Police Department News

`மதுப் பழக்கம், போதைப் பொருள் சகவாசம்!’ -அதிகாலையில் கணவனால்

`மதுப் பழக்கம், போதைப் பொருள் சகவாசம்!’ -அதிகாலையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்தனசேகர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அவரிடம் விசாரித்தபோது மனைவியை தெரியாமல் கொலை செய்துவிட்டதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.
சென்னைக் கொளத்தூர், பாலகுமாரன் நகரைச் சேர்ந்தவர் தனசேகர். இவரின் மனைவி அம்சா (38). இவர்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார். அவர், 9-ம் வகுப்பு படித்துவருகிறார். தனசேகர், ஜி.பி.ரோட்டில் வாஷிங் மிஷின் சர்வீஸ் வேலை செய்துவருகிறார். சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்துக்கு தனசேகர் அடிமையானார். அதனால் குடும்பத்தில் நிம்மதி பறிபோனது.இருப்பினும் கணவரை வெறுக்காத மனைவி அம்சா, அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்தார். இதற்காக போதை மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் சென்று தனசேகருக்கு சிகிச்சையும் அளித்தார். அதன்பிறகு தனசேகர் திருந்த ஆரம்பித்தார். இந்தநிலையில் நேற்றும் தனசேகர் சிகிச்சைக்காகச் சென்றுவந்தார்.வீட்டில் தனசேகர், மனைவி மற்றும் மகளுடன் நேற்றிரவு நன்றாகப் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் மனைவி, மகள் ஆகியோருடன் தூங்கச் சென்றார். அதிகாலையில் தனசேகர் கண்விழித்தார். அப்போது அம்சா, அவரின் மகள் ஆகியோர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். திடீரென அம்சாவின் கழுத்தைப் பிடித்து தனசேகர் நெரித்தார். தூக்கத்திலிருந்த அம்சா உயிருக்குப்போராடினார்.ஆனாலும் தனசேகர் விடாமல் மனைவியின் கழுத்தைப் பிடித்து நெரித்தார். அதில் மூச்சுத்திணறி அம்சா சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து வீட்டை விட்டு தனசேகர் வெளியில் சென்றுவிட்டார். காலையில் கண்விழித்த அம்சாவின் மகள், அம்மா நீண்ட நேரம் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். பின்னர் அவரை தட்டி எழுப்பியபோது அம்சா கண்விழிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தாத்தாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.உடனடியாக வீட்டுக்கு வந்த அம்சாவின் அப்பா வேலுசாமி, மகளை எழுப்பினார். அப்போதும் அவர் கண்விழிக்கவில்லை. அம்சாவின் கழுத்தில் காயங்கள் இருந்ததையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தனசேகர் வீட்டில் இல்லாததால் அவர் மீது உறவினர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து, கொளத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் மற்றும் போலீஸார் அம்சாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தனசேகர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்தது. அவரிடம் விசாரித்தபோது மனைவியைத் தெரியாமல் கொலை செய்துவிட்டதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.தனசேகர் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “தனசேகருக்கு மதுகுடிக்கும் பழக்கத்தோடு போதை பொருள்கள் சாப்பிடும் பழக்கமும் இருந்துவந்துள்ளது. ஒருகட்டத்தில் போதைக்கு அவர் முழுநேர அடிமையாகியுள்ளார். அதனால் குடும்பத்தைக் கவனிக்காமல் எந்நேரமும் போதையிலேயே இருந்துள்ளார்.போதையிலிருந்து மீண்டுவந்த நிலையில் அவரின் நடவடிக்கைகள் சில நேரங்களில் வித்தியாசமாக இருந்துவந்துள்ளது. இந்தச் சமயத்தில்தான் இரவில் மனைவி, மகளுடன் நன்றாகப் பேசிய தனசேகருக்கு அதிகாலை நேரத்தில் மனம் மாறியுள்ளது. அதனால், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். காவல் நிலையத்தில் மனைவி, மகளை நினைத்துப் புலம்பியபடி இருந்த தனசேகர், திடீரெனக் கதறி அழுதுள்ளார். அவரின் நடவடிக்கைகளை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக அவரைக் கைது செய்துள்ளோம்” என்றனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.