



பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி
மதுரை அலங்காநல்லூர் குமாரம் ஊராட்சியில் நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று மாராத்தானில் முதல் பரிசு பெற்ற வீரருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் ரொக்கம் ரூபாய் 10 ஆயிரமும் இரண்டாம் பரிசு பெற்ற வீரருக்கு கேடயம் சான்றிதழ் ரொக்கம் ரூபாய் 8 ஆயிரமும் மூன்றாம் பரிசு பெற்ற நபருக்கு கேடயம் சான்றிதழ் ரொக்கம் 5 ஆயிரம் ரூபாயும் வழங்ப்பட்டது. அதனை தொடர்ந்து நிகழ்சியில் கல்யாணசுந்தரம் நம்பிக்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் இரா.ரூபி மற்றும் சிறப்பு அழைப்பாளர் தெப்பக்குளம் பகுதி போக்கு வரத்து காவல் ஆய்வாளர் திரு.அ.தங்கமணி ஆகியோர்கள் சமூக ஆர்வலர் முனைவர். சி.அர்சத் முபின் அவர்களுக்கு சிறந்த மனித நேயர் என்ற விருதினை வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்சியின் போது சமூக ஆர்வலர்கள் மாராத்தான் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
