
மதுரையில் மாணவர்களுக்கு ரயில்வே குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி,
இரயிலின் மீது கல் வீசுதல், ரயில் தண்டவாளத்தில் கல் மற்றும் பிற பொருட்கள் வைத்தல் தண்டவாளத்தை சட்டவிரோதமாக கடந்து செல்வது சம்பந்தமான குற்றச் செயல்களுக்கு எதிராக மதுரை இரயில்வே பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
02.09.2025 அன்று, காலை 09.00 மணி முதல் 09.30 மணி வரை, மதுரை ரயில் நிலையத்திற்கு வடக்கே அமைந்துள்ள MLWA (மதுரா கோட்ஸ் தொழிலாளர் நல சங்கம்) பள்ளியில் மதுரை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு.அஜித்குமார், உதவி ஆய்வாளர் திரு. முரளி தாஸ், துணை உதவி ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியன் ஆகியோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர் MLWA பள்ளியின் செயலர் திரு. K.நாக சுப்பிரமணிய ன் அவர்கள் வழிகாட்டுதலின் பெயரில் MLWA பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.முத்துசெல்வம் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 790 மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது, மாணவர்களுக்கு பின்வருவன பற்றி விளக்கப்பட்டது:
ரயில் தண்டவாளங்களில் கற்கள் அல்லது பிற பொருட்களை வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள்
ரயில்களில் கல் வீசுவதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சட்ட விளைவுகள்.
ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் சட்ட விளைவுகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
மாணவர்கள்இது சம்பந்தமாக சத்தியப்பிரமாணம் எடுத்தனர், அதில் அவர்கள்,
ரயில்கள் மீது கற்களை எறிய மாட்டோம்.
ரயில் தண்டவாளங்களில் கற்கள் அல்லது பிற பொருட்களை வைக்க மாட்டோம்.
ரயில் தண்டவாளங்களை சட்டவிரோதமாக கடக்க மாட்டோம்.
மற்றும் போதைப்பொருட்களை உட்கொள்ள மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இது தொடர்பாக விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மதுரை ரயில்வே பாதுகாப்புப் படையின் மதுரை கோட்ட பாதுகாப்பு ஆணையர் திரு.செஞ்சய்யா மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு உதவி ஆணையர் திரு.சிவதாஸ் ஆகியோரின் உத்தரவின் பேரில், மதுரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தங்கள் வழக்கமான பணிகளுக்கு மத்தியில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
