

மதுரை பாலரங்கபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது தெப்பக்குளம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல்துறை பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, மீனாட்சியம்மன் கோவில் சரக காவல் உதவி ஆணையர் திருமதி. காமாட்சி,அவர்கள் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு. மாடசாமி மற்றும் போலீசார் மதுரை தெப்பக்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது, பாலரங்கபுரம் CMR ரோடு போஸ் ஆஸ்பத்திரி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த கருப்பாயூரணியை சேர்ந்த செல்வம் மகன் பாண்டியராஜன் வயது 33/22 , வில்லாபுரத்தை சேர்ந்த பாஸ்கரன் மகன் விஜயன் வயது 42/22 திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கனேசன் மகன் சரவணன் வயது 35/22 ஆகிய 3 நபரை போலீசார் கைது செய்தனர்.
மேற்படி, கைது செய்த நபர்களிடமிருந்து இருந்து விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 117கிலோ 10 கிராம் பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர்
மேலும், இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்குபவர்கள், மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.செந்தில்குமார் IPS அவர்கள், தெரிவித்துள்ளார்
