





தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே 36ம் ஆண்டு அருள்மிகு ஶ்ரீ கோபால் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ளது மலையூர் கிராம். இது 900அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள கிராமம்.இங்கு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற கோபால்சாமி திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு திங்கட்கிழமை இரவு கரகாட்டம்,
காவடி ஆட்டத்துடன் சுவாமிக்கு திரு வீதி உலா நடைபெற்றது. புதன்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு மேல் ஸ்ரீ அருள்மிகு கோபாலசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவிற்கு கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி,சேலம், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
