
தென்காசி இந்தியன் பெஸ்ட் சிலம்ப மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் உதவி
தென்காசி பகுதியை சேர்ந்த இந்தியன் பெஸ்ட் சிலம்பம் குழு மாணவர்கள் சென்னையில் நடைபெறவிருக்கும் நேசனல் லெவல் சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொள்ள போதுமான பண வசதி இல்லாத காரணத்தினால் இந்தியன் பெஸ்ட் சிலம்பம் குழுவினர்கள் தென்காசி காவல் ஆய்வாளர் திரு கே எஸ் பாலமுருகன் அவர்களை நாடி உதவி கேட்டனர் அவர்களுக்கு உதவும் வகையில் தென்காசி காவல் ஆய்வாளர் திரு கே.எஸ்.பாலமுருகன் அவர்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக போதுமான பண உதவி ரூபாய் 10,000/- கொடுத்து சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து வெற்றி பெற்று வர மாணவர்களை வாழ்த்தினார், தென்காசி இந்தியன் பெஸ்ட் சிலம்பம் குழு மற்றும் மாணவர்கள் சார்பாக ஆய்வாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
