மதுரை பழங்காநத்தம் பகுதியில் இளம் பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் கைது
மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் காளவாசலில் உள்ள ஒரு பல் பொருள் அங்காடியில் வேலை பார்த்து வருகிறார்
தினமும் அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் போது ஒரு வாலிபர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்னுடன் வந்து விடு என வற்புறுத்தி வந்துள்ளார் இதனை அந்த பெண் கண்டித்துள்ளார்
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அந்த இளம் பெண் வேலை முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிய போது ஆட்டோவை வழி மறித்து அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார்
மேலும் என்னை திருமணம் செய்யாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார் இதன் அடிப்படையில் ஆய்வாளர் பூமிநாதன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.